2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'சமூக எழுச்சிக்கு கல்வி அவசியம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

ஒரு சமூகம் எழுச்சிபெற வேண்டுமானால் அங்கு கல்வி இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த சமூகம் முன்னேற்றமடையும் என கிழக்கு மாகாண சுகாதார  அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

பாலமுனை இப்னுஸீனா கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று புதன்கிழமை மாலை 4.00மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.சாக்கிர் ஹீஸையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு சமூகத்தின் எழுச்சியும் புகழும் கல்வி முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது. அது மாத்திரமல்லாமல் சமூகத்தில் கற்றவர்களும் இருக்க வேண்டும்.கற்றவர்கள் இல்லாத சமூகம் பாழடைந்த இடம் போன்றதாகும்.

எமது பாடசாலையில் இன்று எடுக்கப்படுகின்ற இந்த விழாவின் மூலம் இந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் ஒரு படிக்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இப்பாடசாலையின் குறுகிய கால கல்வி ரீதியிலான வளர்ச்சியை உற்று நோக்கும் போது, இந்த பாடசாலையின் அதிபரின் சிறந்த வழிகாட்டலும் அதனுடன் இணைந்ததாக இப்பாடசாலை ஆசிரியர்களின் ஒத்ழைப்பும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரின் சிறந்த செயற்பாடாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒரு பாடசாலையில் கல்வி கற்பதற்காக பிள்ளைகளை சேர்த்து விட்டால் மாத்திரம் போதாது. அந்த பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் அதிபர், தளபாட பற்றாக்குறை நிலவுவதாக என்னிடம் சுட்டிக்காட்டினார்.அவரது கோரிக்கையினை ஏற்று இந்தப் பாடசாலையின் தளபாட பற்றாக் குறையினை நிவர்த்திக்கும் முகமாக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்தப் பாடசாலைக்கு 4 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .