Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சமூகத் தலைவர்கள் சமூகத்தின் வழிகாட்டியாக செயற்பட வேண்டுமென மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதவான் என்.எம்.எம். அப்துல்லா தெரிவித்தார்.
அம்பாறை பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அல் ஹாபிழ் கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (06) மாலை பாலமுனை இப்னு சீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அல்-அறபா விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நீதவான் என்.எம்.எம். அப்துல்லா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒரு கிராமத்தின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமூகம் நமது நாட்டில் பல கல்வியாளர்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரும் பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசீலனையுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் அச் சமூகம் எதிர் பார்த்திருக்கின்ற இலக்கை அடைய முடியும்.
சமூக தலைவர்கள் தமது ஆளுமையை வளர்த்து சமூகத்தை வழிநடத்தும் அறிவாற்றல் உள்ளவர்களாக மற வேண்டும். இதன்மூலம் சமூகம் வளரும்.
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் மருத்துவம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய துறைகளில் புகழ் ஓங்கிக் காணப்பட்டது. தற்போது அவை சமூகத்தை விட்டு குறைந்து காணப்படுகின்றன.
ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அங்கு கல்வி, பெருளாதாரம் என்பன ஒருமித்து காணப்பட வேண்டும். அப்போது தான் நாட்டின் இலக்கை அடய முடியும்.
நாம் இன்று தொழில்நூட்ப அபிவிருத்தி அடைந்த இக்கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இளமைப் பருவத்தினை நல்ல முறையில் கொண்டு சென்றால் எதிர்காலத்தில் நாட்டுக்கு தேவையான புத்திஜீவியாகவும் சிறந்த கல்விமானாகவும் வரமுடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago