Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
'தமிழர்களாகிய நாம்; இந்த நாட்டில் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழ விரும்புகின்றோம். இதை இந்த அரசாங்கமும் நாட்டில் இருக்கின்ற தலைவர்களும் தருவார்களாயின், எந்தப் பேச்சுக்கும் இடமில்லை' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 'இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல்; விழா -2016' கல்முனை ஆர்.கே.எம்.பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த மண்ணில் தமிழும் தமிழினமும் வாழவேண்டும் என்பதற்காகவே அனைத்துப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
பேரினவாதச் சக்திகளினால் எங்களுக்கு மொழி ரீதியாக, கலாசார ரீதியாக மற்றும் ஏனைய விடயங்களில் கூட சமத்துவம் வழங்கப்படவில்லை. நாங்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நாட்டிலே தனித்துவமாக இயங்குவதற்கு வழி தேடினோமே தவிர, வேறு எந்;தக் காரணத்துக்காகவும் அல்ல' என்றார்.
31 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
1 hours ago