2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியமாகும்'

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

தேகாரோக்கியமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதற்கு விளையாட்டின் மூலம் சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியமாகும். உடல் ஆரோக்கியம் பேணப்படாமையால் இலகுவாக  தொற்றா நோய் எம்மை பீடித்து அதனால் இன்று அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன. எனவே, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியமாகும் என்று விளையாட்டுத் துறை வைத்திய நிபுணர் டொக்டர் எம்.முஹைம் தெரிவித்தார்.

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய வாரம் - 2016ஐ முன்னிட்டு, இன்று(27), அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  தேகாரோக்கியமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விளையாட்டுத் துறை வைத்திய நிபுணர் டொக்டர் எம்.முஹைம்,  தேகாரோக்கியத்தைப் பேணல் அவசியமும் தொற்றா நோய் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், திட்டமில் உதவிப் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.எல்.ஹுஸைனுதீன், பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X