2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கப் போவதில்லை'

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

புதிய அரசியலமைப்பின் சர்வஜன வாக்கெடுப்புக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் அமைப்பாளர் ரகீப் ஜௌபார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை செயற்படுத்துவதற்கேற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயமான ஓய்வுதியத் திட்டம் உருவாக்க வேண்டும்.

மேலும், வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பிய எமது தொழிலாளர்களின் பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் மீண்டும் சேர்த்துக் கொள்ளமுடியாத நிலை தொடர்கின்றது. இதற்கு காரணம் வெளிநாட்டு பாடசாலைகளின் கற்கைநெறி வித்தியாசமென்று கூறப்படுகின்றது.

எனவே, இதற்கு தீர்வுகாணும் வகையில், கல்வி சட்டத்தில் மாற்றம் அவசியம். இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இலவச பல்கலைகழக அனுமதி, அவர்களுக்கான விசேட ஒதுக்கீடு போன்ற விடயங்களை கல்வி சட்ட சீர்திருத்தத்தினுடாகவே செய்ய முடியும்.  

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டுக் கொள்கையில் திருத்தம் அவசியம்.

இவ்வாறு பலதரப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது, கருத்திற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு புறக்கணிக்கப்படுமாக இருந்தால் , புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்படாத எந்தவொரு புதிய அரசியலமைப்புக்கும் புலம்பெயர் தொளிலாளர்கள் ஆதரவளிக்கத் தயாரில்லை. இதனால் சுமார் 33 சதவீத மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X