2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தேசிய காங்கிரஸ் அரசியல் இலாபம் கொண்டு செயற்படும் கட்சி அல்ல'

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய காங்கிரஸ் வெறுமனே அரசியல் இலாபம் கொண்டு செயற்படும் ஒரு கட்சி அல்ல என்பதை கடந்தகால அரசியல் செயற்பாடுகளின் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைவரும் புரிந்து கொண்டுள்;ளனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில், அறுகம்பே ஆட்டோ சங்கத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி  இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அரசியல் இலாபங்களுக்காகவும் தமது சுகபோகங்களுக்காகவும் குரலை உயர்த்தி கோஷமிட்டு ஒரு கூட்டம் இன்னும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தி வருவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'தேசிய காங்கிரஸ் அரசியல் இலாபங்களுக்காக சோரம் போக முடிந்திருப்பின் மிக இலகுவாக இந்த அரசாங்கத்திலும் அதிகாரத்துடன் இருந்திருக்க முடியும். அவசரப்பட்டு அதனை செய்யவில்லை.
மீண்டும் தேசிய காங்கிரஸுக்கான அரசியல் அதிகாரத்தினை மக்கள் ஆணையுடன் பெற்றுக் கொண்டே மக்களுக்கான சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்' என்றார்.
 'முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னர் அவர் கொண்டிருந்த குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தேசிய காங்கிரஸே முன்னெடுத்து வருகின்றது' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X