2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'தென்கிழக்கு பல்கலையின் பொறியியல்பீடம் அபிவிருத்தி செய்யப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா,எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்படமாட்டாதென்பதுடன், அப்பீடத்தில் நிலவுகின்ற குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்திக்கப்பட்டு சகல வசதிகளும் கொண்டதாக அப்பீடம் அபிவிருத்தி செய்யப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மற்றும் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெந்தோட்டையில் சனிக்கிழமை (28) சந்தித்து கலந்துரையாடியபோதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தில் காணப்படும் பிரச்சினைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்படுமென்று பிரதமர் உறுதியளித்ததாக பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் போதியளவான வளங்கள் இல்லையெனவும் இதனால், அப்பீடத்தை மூடிவிட்டு தம்மை வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றுமாறு கோரி மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்து வருகின்றமை தொடர்ப்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

போதிய இடவசதியின்மை, உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் மேற்படி பொறியியல் பீடத்தில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X