Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 2,000 குடும்பங்கள்; நிரந்தர வீடுகளின்றி வாழ்ந்துவருவதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.
தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு சீமெந்து பக்கெட்டுகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இவ்வாறான மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதனொரு அங்கமாக வீடுகள் கட்டப்பட்டு பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ள 51 குடும்பங்களுக்கு சீமெந்துகள் வழங்கப்படுகின்றன' என்றார்.
இங்கு தெரிவித்த தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை அலுவலக முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் 'கடந்த அரசாங்கத்தின்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பொதுமக்கள் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கடனின்; வட்டி வீதம் 11 சதவீதமாக காணப்பட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம்; வறிய மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மிகவும் குறைந்த வட்டி வீதமான 3.73 சதவீதத்திற்கு வீட்டுக் கடங்களை வழங்கவுள்ளது.
இந்த ஆண்டில் அம்பாறை மாவட்டத்திற்கு ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் இரண்டாயிரம் வீடுகள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. தற்போது வீடுகள் கட்டுவதற்கான தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டரை இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் வீடுகள் இல்லாத குடும்பங்களின் தொகைகளை குறைக்ககூடியதாக இருக்கும்' என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago