Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தக்கூடிய இயற்கை அழகு கொண்ட இடங்கள் பல காணப்படுகின்றன. எனவே, இப்பிரதேசத்திலும் சுற்றுலாத்துறையை உருவாக்குவதற்கு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்கள் முன்வர வேண்டுமென திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை போரம் அமைப்பின் நிகழ்வு, அறுகம்பை பே மிஸ்றா ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உலக நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நாடாக இருக்கவேண்டிய எமது நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்னடைவாக இருப்பது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.
தற்போது இலங்கை மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவரும் இந்நிலையில், இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்தும் கொண்ட இடங்களை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். இதனுடான இலங்கையில் நிலவுகின்ற வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்திலும் பல சுற்றுலா இடங்கள் கணப்படுகின்றன. இவ்வாறான இடங்களை சுற்றுலாத்துறை முதலீட்டாளர்கள் முன்வந்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய வேண்டும்.இதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் தம்மால் கொடுக்க முடியும்' என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago