2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருக்கோவிலில் 52 வீடுகள் நிர்மாணிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

வீடுகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான கூட்டம்,  திருக்கோவில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 600 பேர் வீடுகளுக்கான விண்ணபித்துள்ளனர். இவர்களில் 52 குடும்பங்களுக்கே வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான  அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், மீள்குடியேறிய குடும்பங்களும் புனர்வாழ்வு பெற்றவர்களின் குடும்பங்களுமே இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு வீடும் எட்டு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஆகவே, இந்த வீடுகளுக்காக விண்ணப்பித்த பயனாளிகள் ஒவ்வொருவரும் இலங்கையின் எப்பாகத்திலும் தங்களின் பெயரில் வீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதேவேளை, பயனாளிகளின் பெயரில் காணி உறுதிப்பத்திரங்கள்; இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், இடப்பெயர்வையும் புனர்வாழ்வு பெற்றவரகள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இதற்கான முதற்கட்ட வேலை எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதுடன், திவிநெகும வங்கி மூலமாக முதற்கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும்  ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்த வீடுகளை சரியாகக் கட்டி முடிக்கத் தவறும் பயனாளிகளுக்கு மேலதிக நிதி; இடைநிறுத்தப்டும் நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X