Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா,பைஷல் இஸ்மாயில்
இலங்கையில் நடமுறைபடுத்தப்படும் முஸ்லிம் திருமண சட்டத்தில் உள்ள திருமணத்துக்கான வயதில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கைகளை உலமா கட்சி நிராகரிக்கிறது என அதன் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உண்மையில் சுமார் 30 வருடங்கள் முன்பு வரை சிறு வயது திருமணங்கள்தான் முஸ்லிம்களிடம் அதிகம் நடைபெற்றன. சிறு வயது என்பது பருவமடைந்த வயதாகும். இப்போது இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறான திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்தான். அப்படியென்றால் இள வயதில் திருமணம் முடித்த இவர்களின் பெற்றோர்களெல்லாம் விவாகரத்தாகியுள்ளார்களா என கேட்கிறோம்.
இப்போதெல்லாம் சிறு வயது திருமணங்களை காணமுடிவதில்லை. பெரும்பாலும் 19 வயதுக்கு பின்னரே திருமணம் முடிக்கின்றனர். படித்த ஆண் பிள்ளைகள் 26 வயதுக்குப் பின்னரே திருமணம் முடிக்கின்றனர். இருந்தும் முக்காலங்களை விட தற்போதே விவாகரத்து அதிகமாவதை காண்பதன் மூலம் விவாகரத்து அதிகரிப்புக்கு காரணம் இளவயது திருமணம் அல்ல என்பதை எந்த புத்திஜீவியாலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன், முற்காலத்தை விட சிறுவயது காதல்கள் அதிகரித்த உலகில் நாம் வாழ்கிறோம். 16 வயது பையன் 12 வயது சிறுமியை இழுத்துக்கொண்டு ஓடுவது அல்லது கற்பழிப்பது போன்ற செய்திகள் ஏராளம். இவ்வாறான செயலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்காவிடில் இன்னும் பல சிறுமிகள் அல்லது சிறுவர்கள் நாசமாகிவிடுவர்.
இன்றைய விவாகரத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் பெண்கள் அளவுக்கதிகம் ஆண்களிடம் எதிர் பார்ப்பதும் ஆணும் பெண்ணும் ஒருவரை மதிப்பது குறைந்துள்ளதுடன், இஸ்லாமிய அறிவு, ஒழுக்கம், கலாசார பண்பாடுகள் மீதான பற்றுக்குறைவுமாகும்.
ஆகவே, நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமண சட்டத்தில் உள்ள வயதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உலமா கட்சி மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறது.
இது விடயத்தில் இஸ்லாமிய அறிவோ யதார்த்தமோ தெரியாமல் மேற்கத்தியவாதிகளின் கருத்தை விழுங்கி அப்படியே சில முஸ்லிம் பெண்களும் பெண் அமைப்புக்களும் வாந்தி எடுப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago