2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'தீர்வு கிடைக்காவிடின் ஆதரவு நிறுத்தப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சிறந்ததொரு தீர்வுத்திட்டம் நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து விரைவில் கிடைக்காத பட்சத்தில், இந்த அரசாங்கத்துக்கு வழங்கிக்கொண்டிருக்கும் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக நிறுத்திக்கொள்ளுமென கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (28) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் இந்நாட்டில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்திருந்தனர். இனிமேலும் தமிழ் மக்கள் துன்பத்தை அனுபவிக்கக்கூடாது. எனவே, தமிழ் மக்கள் துன்பத்தை அனுபவிக்கக்கூடாதெனின், அவர்களுக்கு  சிறந்ததொரு தீர்வுத்திட்டத்தை இந்த நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும்' என்றார்.

'மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் சாதிக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுத்தரப்படும். இதற்கமைய  தேசியத்திலும் சர்வதேசத்திலும் பலம் பொருந்திய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தனது வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றது' என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X