2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'தீர்வுத்திட்டம் சிறுபான்மைச் சமூகங்களை திருப்திப்படுத்தவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 10 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்துடனான தீர்வுத்திட்டமானது சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையவேண்டுமென தேசிய மீனவப் பேரவையின் தேசிய அமைப்பாளர் டபிள்யூ.ஏ.ஹேமன்குமார தெரிவித்தார்.

இதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது சமூகம் சார்ந்த நலன்களையும் தீர்;வுத்திட்ட ஆலோசனைகளையும் அரசாங்கத்திடம் முன்வைக்கவேண்டியது கடமையாகும். இதற்கான அழுத்தங்களையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தும் வகையில் சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பயன்மிக்க கருத்தாடல்;களையும் வழிநடத்தல்களையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட மீனவப்பேரவையின் அனுசரணையுடன் வளர்பிறை பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க கூட்ட மண்டபத்தில் திங்கட்கிழமை (09) மாலை நடைபெற்ற  ஒன்றுகூடலிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'அதிகாரப்பரவலாக்களின் பொருட்டே 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தினூடாக இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அந்த அதிகாரங்கள் பூரணமாக வழங்கப்படவில்லை. முக்கியமாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்னும் இருந்துவருகின்றன' என்றார்.

'தற்போதைய அரசாங்கமும் சர்வதேசமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகின்ற நிலைமை சிறுபான்மைச் சமூகங்களுக்கு பிரச்சினைகள் உண்டென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைகின்றது. எனவே, இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு தற்போதுள்ள தேசிய அரசாங்கத்தை நல்லதொரு வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸடீன், கள உத்தியோகத்தர் கே.கோகுலன், வளர்பிறை பிரஜைகள் அமை;பின் தலைவர் ஏ.ஆர்.பமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .