2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தொற்றாநோயால் 60 சதவீதமானோர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கையில் 60 சதவீதமான மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று ( வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறந்த நாடொன்றை கட்டியொழுப்புவதற்கு நாம் எல்லோரும் சுகதேகிகளாக வாழ வேண்டும். ஒவ்வொருவரும் உணவு பழக்கவழக்கத்தினை கடைப்பிடித்து வாழுவோமானால், சிறந்த சுகதேகிகளாக வாழ முடியும்.

நாம் எல்லோரும் உடற்பயிற்சி மற்றும் சிறந்த உணவுப் பழக்கழக்கங்களை கடைப்பிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் சிறந்த நேயற்ற இலங்கையை கட்டியெழுப்ப முடியும். சுகாதார பழக்கவழக்கங்களை தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றி நடக்காதவர்கள் இன்று பல பாரிய நோய்களுக்கு ஆளாகி வருவதை நாம் காணுகின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X