2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 30 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெறும்போது, அது துஷ்பிரயோகம் என்பதை  இனங்காண முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். எனவே, துஷ்பிரயோகச் சம்பவங்களை இல்லாமல் செய்வதற்காக பாடசாலை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதே, துஷ்பிரயோகச் சம்பவங்களைத் தடுக்க முடியும் என நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.எம்.கஸ்பியா தெரிவித்தார்

நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் பிளான் சிறிலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடனும் வேப்பையடிக் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அண்மைக்காலமாக இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை உள்ளது' என்றார்.

'கடந்தகால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பெண்களும் சிறுவர்களுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X