2025 மே 21, புதன்கிழமை

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சாய்ந்தமருது பிரதேச கிளை முக்கியஸ்தர்கள் இருவரின் பிணை மனு நிராகரிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சாய்ந்தமருது பிரதேச கிளை முக்கியஸ்தர்கள் இருவரினதும் பிணை மனு கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் பொலிஸ் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஒலிபெருக்கி பயன்படுத்தி, மார்க்கப் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது கல்முனை பொலிஸார் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு இடையூறு விளைவித்து குழப்பம் ஏற்படுத்தியதுடன், பொலிஸாரையும் தாக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் திங்கட்கிழமை (14) சட்டத்தரணிகளான சறூக் காரியப்பர், எம்.மனார்தீன் ஆகியோர் ஊடாக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பம் சமர்ப்பித்தபோது நீதிபதி எம்.ஐ.பயாஸ் ரஸ்ஸாக் அந்த பிணை மனுவை நிராகரித்தார்.

அத்துடன், பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் குறித்த இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு தேடுதல் நடத்தப்படுவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கபார் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .