Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
தகவல் அறியும் சட்டமூலத்தை முறையாக அமுல்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மிக நீண்டகாலமாக இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் கூட, இதனை அமுலுக்கு கொண்டுவருவதில் ஏற்படுத்தப்பட்ட தாமதம் கவலையளிக்கிறது.
நல்லாட்சி என்பதன் அடிப்படைப் பண்புகளில் ஒன்று வெளிப்படைத் தன்மையாகும். அதற்கு நடைமுறை வடிவம் கொடுக்க வேண்டும் என்றால் தகவல் அறியும் சட்டம் என்பது மிகவும் அத்தியவசியமாகும். இந்த தகவல் அறியும் சட்டத்தின் பலனாகவே இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மோசடிகளை முறியடிக்க முடிந்திருக்கிறது.
அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை சட்டபூர்வமாக இலங்கை மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக பலமாக முன் வைக்கப்பட்டு வந்துள்ளது.
இச்சட்டமூலத்திற்கான அங்கிகாரம் அமைச்சரவை மட்டத்தில் சில வருடங்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் கிடப்பில் போடப்பட்டே வந்தன. இதன் பின்னணியிலேயே தற்போதைய ஜனாதிபதியும்; அரசாங்கமும் இச்சட்டமூலத்தை உடனடியாக கொண்டு வருவதாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்குப் பிந்திய பொதுத் தேர்தல் காலத்திலும் தொடர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி வந்தனர். அதனையும் அடிப்படையாகக் கொண்டே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். இருப்பினும் 19 மாதங்கள் கடந்து விட்ட பின்னரே அது தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இது வெறும் சட்டமாக மாத்திரம் இருந்து விடாமல் இதன் நன்மைகளை மக்கள் நேரடியாக அனுபவிக்கக்கூடிய கட்டமைப்புகளை அரசாங்கம் காலதாமதமின்றி உடனடியாக உருவாக்க வேண்டும். அதன் மூலம் நல்லாட்சி தொடர்பான தமது அர்ப்பணத்தை அரசாங்கம் நிரூபிக்க முன்வர வேண்டும்.
அத்தோடு இச்சட்டம் பற்றிய விரிவான விழிப்புணர்வுகளை மக்கள் பெற்று தத்தமது பிரதேசங்களில் நடைபெறும் அரச நிறுவனங்களில் இடம்பெறும் கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் என்பன தொடர்பில் இச்சட்ட மூலத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்று ஊழல் மோசடிகளுக்கெதிராக குரல் கொடுக்கின்றவர்களாக மக்கள் மாற வேண்டும். அவ்வாறு தகவல் அறியும் சட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்துகின்றபோது மாத்திரமே அதன் முழுமையான நோக்கத்தை அடைய முடியும் என்பதோடு நல்லாட்சி ஒன்றினை வலுப்படுத்தவும் முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
37 minute ago
2 hours ago