2025 மே 19, திங்கட்கிழமை

'தண்டனை நிச்சயம்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

'எனது கணவரை கொன்றவர்கள் உயிருடன் இருந்தால் இறைவனின் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என மனச்சாச்சியுடன் கூறுகின்றேன்' என ஆலையடிவேம்பு நவற்காடு பெரியகுளத்தில் வசிக்கும் சுவாமிநாதன் ராஜேசிறி சந்திரலேகா (வயது-53) தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், '1990ஆம்; ஆண்டு இடம்பெற்ற யுத்த காலத்தில் எனது கணவரை இராணுவத்தினர் கொண்டு சென்று கொன்றுவிட்டார்கள். பனங்காட்டுப் பிரதேசத்தில் அன்றையதினம் 27 பேரை இராணுவம் கூட்டிச்சென்று இதில் 17 பேரை கொன்றுவிட்டு 10 பேரை 01 மாதத்தின் பிறகு விட்டிருந்தார்கள்.

எனது கணவரின் புகைப்படத்தை காண்பித்து இராணுவத்திடம் கேட்ட போது அவர்கள் என்னை பல கேள்விக் கனைகள் கேட்டு சில சேட்டைகளுக்கு எத்தனித்தார்கள். இதனால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். கணவரைக் கொல்லும் போது எனக்கு 04 பிள்ளைகள் யுத்த காலத்தினால் அவர்கள் படிக்க முடியாதனால் தற்போது நிரந்தர தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டுகின்றார்கள்.

இறந்த எனது கணவரை தாங்க என்று கேட்பது தற்போது நியாயமில்லை எனக்கு அன்றாட ஜீவனோயபாயத்திற்கு அரசாங்கம் மாதாந்தம் ஓய்வூதியம் போன்று நிதி வழங்க வேண்டும். அரசாங்கத்தினால் தற்போது 250 ரூபாய் மாதாந்த கொடுப்பனவும், உணவு முத்திரையும் வழங்கப்படுகின்றது. ஆண் பிள்ளைகள் இருப்பதால் இவை எப்போது நிறுத்தப்படுமென்பது தெரியவில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X