Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவிலில் தனியான கல்வி வலயத்தை உருவாக்குதவற்கான அனுமதியை கிழக்கு மாகாண சபை வழங்கியபோதிலும், அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென அம்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 'பொத்துவில் கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை 2011ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத் மாகாண சபையில் முன்வைத்தபோது, இதற்கான தீர்மானத்தை மாகாணசபை வழங்கியிருந்தது.
இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்கவினால் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோது, அதற்கும் முழு அங்கிகாரம் வழங்கப்பட்டு அங்கு உப கல்வி வலயம் உருவாக்கப்பட்டது. இந்த உப கல்வி வலயம் விரைவில் கல்வி வலயமாக தரம் உயர்த்தப்படுமென்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் பொத்துவில் மத்திய கல்லூரி வைபவமொன்றில் உரையாற்றியபோது, பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் இரண்டு வாரங்களுக்குள் உருவாக்கப்படுமென்று வாக்குறுதியளித்திருந்தார்.
2016ஆம் வருட வரவு -செலவுத்திட்டத்தின் கல்வியமைச்சுக்கான விவாதத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் இது தொடர்பான கோரிக்கை முன்வைத்தபோது, பொத்துவில் பிரதேசத்துக்கான கல்வி வலயக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஆனால், இதுவரையும் பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் உருவாக்கப்படவில்லை' என்றார்.
எனவே, பொத்துவில் பிரதேசத்திலுள்ள 21 முஸ்லிம் பாடசாலைகளையும் 8,000 மாணவர்களின் நன்மை கருதியும் தனியான கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
3 hours ago
8 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Sep 2025