Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
நாட்டில் இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நல்லாட்சி அரசாங்கமானது திடமான நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற இச்சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் -முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிலவும் சில முரண்பாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு சில சக்திகள் பாரிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதை தன்னால் அவதானிக்க முடிகிறது என கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, திங்கட்கிழமை (11) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கடந்த சில நாட்களாக எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் -முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய நல்லுறவை மிக இலகுவில் உடைக்கக்கூடிய காரணிகளை அறிந்துகொண்டுள்ள தீயசக்திகள், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது' என்றார்.
'இந்த சூழ்ச்சிகளை இரண்டு சமூகங்களும் இணைந்து முறியடிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. எமது மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் எந்தவொரு சமூகத்துக்கும்; அநியாயம் இழைக்காத வகையில் மிகவும் பக்குவத்துடன் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago