Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 01 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பிரதேச வாத உணர்வுகளையும் தூண்டக் கூடிய அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அண்மையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் தெரிவித்த கருத்து தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்யைில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வாக்களித்த அக்கரைப்பற்று மக்களின் குரலாக இறுதி நிமிடம் வரை போராடுவேன். இவ்வாறு செயற்படும் தன்னை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
எங்களிடம் அரசியல் அதிகாரங்கள் இருந்தபோதெல்லாம் அக்கரைப்பற்று மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளோம்.
இரண்டு தடவைகள் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் அக்கரைப்பற்று மக்கள் அதிகப்படியான வாக்குகளை எமக்களித்து அங்கீகாரம் வழங்கி உள்ளனர். வாக்களித்த மக்களின் கல்வி அபிவிருத்தி விடயங்கள் பற்றி பேசுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்தின் அங்கிகாரம் பெறவேண்டியதென்பது அவசியமில்லை.
அக்கரைப்பற்று மக்களின் கல்வி விடயம் பற்றி பேசுவதற்கு உதுமாலெப்பை அருகதையற்றவர் எனவும் எமது மக்ளின் கல்வி விடயத்தில் தலையிடக் கூடாது எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியிருந்தார்.
அக்கரைப்பற்று மக்கள் எனக்கு வழங்கிய அரசியல் அதிகாரம் இருக்கும் இறுதி நிமிடம் வரை அந்த மக்களின் குரலாக செயல்படுவதனை எவராலும் தடுக்க முடியாது என்பதனை தெரிவிக்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின் அக்ஃஅஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபரான எம்.ஐ.எம்.உவைஸூக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பல்வேறு கஷ்டங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மன உளைச்சலுக்குள்ளான நிலையில் வேறு பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று தருமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத அஸ்ஸிராஜ் மகா வித்தியாலய ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் 80 பேர் இணைந்து கையொப்பமிட்டு இடமாற்றம் கோரிய வேண்டுகோளை மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றக் கோரி அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு வலயக்கல்வி பணிப்பாளருக்கு தன்னால் வழங்கப்பட்ட வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கோரிய கடிதத்தினை அதிபர் உவைஸ் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகள் சிலவற்றில் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதால் கல்வி வளர்ச்சியில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அக்கரைப்பற்று பிரமுகர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோவை சந்தித்து முறையிட்டுள்ளனர். இத்தனை நிலைமையும் ஏற்பட்ட பின் அக்கரைப்பற்று கல்வி விடயமாக என்னை தலையிடக் கூடாது என மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியிருப்பது உண்மையை மறைக்க எடுக்கும் முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது.
தனது அரசியல் நலனுக்காக பிரதேச வாத உணர்வுகளை தூண்;டி ஒற்றுமையாக வாழும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேச மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி வருவது குறித்து நாம் கவலை அடைய வேண்டியுள்ளது. அக்கரைப்பற்று கல்வியின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்பதை அக்கரைப்பற்று மக்கள் பதில் சொல்லும் காலம் மிக விரைவில் வரும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .