2025 மே 22, வியாழக்கிழமை

'நாட்டின் இறைமையை பாதுபாப்பது பிரஜைகளின் கடமை'

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டின் இறைமையை பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜைகளின் கடமையாகுமென அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

'நாட்டை நேசிப்போம் தாயக பூமியை வளப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தான் பிறந்த நாட்டை நேசிப்பதன் மூலம் நாட்டின் இறைமையைப் பாதுகாத்து அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.

மக்களின் நலன் கருதி தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாகச் செய்வதும் உண்மையான தேசப்பற்றாகும்.

தேசப்பற்றுள்ள ஒரு குடிமகன் நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பங்களிப்புகளைச் செய்வது நாட்டுப்பற்றின் உண்மையான அடையாளங்களாகும்.

எனவே, நமது நாட்டின் பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்து நல்லாட்சி மேலோங்க நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X