Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சில ஊர்களில் சில எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளன. அங்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள், நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று, தற்போது பரவலானதொரு ஊகங்கள் மக்களிடையே தீவிரமாக பரப்பப்பட்டு வருகின்றன. கட்சித் தலைமை வழங்கிய வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்யாகமாட்டாது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதங்கள் ஏற்படலாம். ஆனால், வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
“நாங்கள் சிலருக்கு வழங்கிய பதவிகளைக்கூ குறிப்பிட்ட காலத்துக்குத்தான் வழங்கியுள்ளோம். அதுவும் பல நிபந்தனைகளுடனேயே, அவர்களுக்கு பதவிகளை வழங்கியிருக்கிறோம். காலநேரம் வரும்போது, அவர்கள் தங்களது பதவியை விட்டுக்கொடுப்பார்கள்” என்றும் அவர் கூறினார்.
அம்பாறை, சின்ன பாலமுனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமையன்று, பாலமுனை அல்ஹிக்மா பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறியதாவது,
“நாங்கள் சிலருக்கு வழங்கிய பதவிகளைக்கூ குறிப்பிட்ட காலத்துக்குத்தான் வழங்கியுள்ளோம். அதுவும் பல நிபந்தனைகளுடனேயே, அவர்களுக்கு பதவிகளை வழங்கியிருக்கிறோம். காலநேரம் வரும்போது, அவர்கள் தங்களது பதவியை விட்டுக்கொடுப்பார்கள்.
முஸ்லிம்களிடையே அரசியல் சமநிலையைக் குழைத்து, மக்களை குழப்புவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அவர்களது நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் செவிசாய்க்காது, கட்சியை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வெளியுலக சவால்களை எதர்கொள்வதற்கு எம்மிடமுள்ள ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும்.
எம்மிடையே நிலவும் சந்தேகங்களை முதலில் களையவேண்டும். அவசரமாக எதனையும் சாதிப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. பக்குவகமாக பல வேலைகளை செய்யவேண்டிய நிலையில் எமது கட்சி இருக்கிறது” என்று அவர், மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago