2025 மே 19, திங்கட்கிழமை

'நுரைச்சோலை கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நுரைச்சோலைப் பிரதேச கரும்பு விவசாயிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு நுரைச்சோலை கரும்பு விவசாயிகள் அமைப்பு நன்றி தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ளது.

அத்துண்டுப்பிரசுரத்தில், 'நீண்டகாலமாக கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தீர்கள். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

'ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை பொறுப்பெடுக்கும்  நிறுவனமானது வட்டிக்கு பணம் வசூலிக்கும் பல வியாபாரங்களில் ஈடுபடுகின்றது. அந்நிறுவனம் அப்பாவி கரும்புச் செய்கையாளர்களுக்கு 18 சதவீத வட்டிக்கு பணம் வழங்கி வட்டி அறவிடுவதில் கவனம் செலுத்துகின்றதே தவிர,  சீனி உற்பத்தியில் பாரிய கவனம் செலுத்துவதில்லை. கரும்புச் செய்கையாளர்கள் நலனில் அக்கறை காட்டுவதுமில்லை' என மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X