Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Gavitha / 2016 மார்ச் 07 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
'இலங்கையில் வாழும் மக்களில் 100க்கு 15 சதவீதமான மக்களுக்களுக்கு நீரிழிவு நோயும் 20 சதவீதமான மக்களுக்கு இரத்த அழுத்தமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன' என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நேற்று ஞாயிறுக்கிழமை (06) தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை ஐடியல் பியுபிள்ஸ் லீக் (IPL) 'சமூகத்துக்கான ஒன்றியம்' உயர்பீடக் கூட்டம் சனிக்கிழமை (05), அதன் தலைவர் எஸ்.எச்.சபீக் தலைமையில் இடம்பெற்றது.
அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இரசாயன உர வகைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தி விவசாயங்களைச் செய்து அதன் மூலம் பெறப்படும் உணவுகளையே அதிகம் உட்கொண்டு வருகின்றனர். நாவுக்கு ருசியான உணவுகளையே விரும்புகின்றமையினால், பின்னால் வரும் பிச்சினைகள் குறித்து சிந்திக்காமல் உள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டார்.
'இதனால் எமது வாழ்க்கை முறைமை ஒரு பிழையான சுற்றோட்டத்தின் கீழ் செல்கின்றது. இந்நிலைமை எமது சமூகத்தில் மாற்றப்படவேண்டும். அதற்கான ஒரு திட்டத்தை இளம் சமூதாயத்தினராகிய நீங்கள் பாடுபட்டு முயற்சிப்பதன் மூலமே இதனை மாற்றியமைக்க முடியும்' என்றார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஒதுக்கப்பட்ட 4 இலட்சத்துக்கு, 200 பிலாஸ்டிக் கதிரைகளும் முழுமையான ஒலிபெருக்கி சாதனங்களையும் அட்டாளைச்சேனை ஐடியல் பியுபிள்ஸ் லீக் (IPL) சமூகத்துக்கான ஒன்றியத்துக்கு, அமைச்சரால் இதன்போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .