Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
முஸ்லிம்களின் விவகாரங்களை வலியுறுத்தி முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவன ஈர்ப்பு போராட்டமும் நாளை புதன்கிழமை காலை நடத்தவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஆசிக் தெரிவித்தார்.
இது விடயமாக ஊடகவியாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று(03) ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலில் நடைபெற்றது இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐ.நா.வின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள யுத்த குற்ற விசாரணையை 1985ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பதே எமது பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தையும் உட்படுத்த வேண்டும்.
அத்துடன் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் விசாரணை செய்ய வேண்டியதுடன் அவர்களுக்கான இழப்பீட்டையும் வழங்குவதற்கு வலியுறுத்த வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த கருத்துடன் செயற்படுத்த வேண்டும்.
வடபகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை துரிதமாக அமைக்க வேண்டும்.
வடமாகாணத்தில் வனப்பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீளவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவற்றை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago