2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'புகைத்தல், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அர்ப்பணிப்புடன் காப்பாற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகவுள்ள மக்களை அதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை திவிநெகு சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் அப்பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஆரோக்கியமான சமூகமே அந்த நாட்டின் மதிப்பிட முடியாத வளமாக உள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்களும் அடிமையாக மாறிக்கொண்டு வருவது தற்போது எதிர்நோக்கும் பாரிய சவாலாகும்' என்றார்.

'மேலும், தற்போது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதைக்; காணக்கூடியதாவுள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக தங்களின்  வருமானத்திலிருந்து ஒருதொகைப் பணம் செலவிடப்படுவதால்,  போஷனை மட்டம் குறைவடைந்து செல்வதுடன்,  சிறுவர்களின் கல்வி நிலையும் பாதிக்கப்படுகின்றது. தொற்றாநோய்களான புற்றுநோய், ஆண்மைக்குறைவு உள்ளிட்டவை ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு' எனவும் அவர் மேலும் கூறினார்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X