Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இக்கல்லூரியில் இருந்து வெளியாகும் மாணவர்கள் மௌலவித் தராதரத்துடன் பல்கலைக்கழகப்பட்டத்தையும் பெறக்கூடியவர்களாக இக்கல்லூரியின் பாட விதானம் பட்டை தீட்டப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை ஷர்க்கியா கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60ஆவது ஆண்டு நிறைவு வைர விழா மற்றும் 8ஆவது மௌலவி பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிமை (06) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி.எம்.இஷாக் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியை ஜாமியாவின் அந்தஸ்த்துக்கு உயர்த்தும் பணி எமது தோள்மேல் சுமத்தப்பட்டுள்ளது. அதற்குச் சமாந்திரமான பௌதிக அபிவிருத்தியுடன் நவீன யுகத்துக்கு ஏற்றாப்போல் கற்கை நெறிகளும் இடம்பெறவேண்டும். அதற்கான கனவுகளை நனவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பாரிய சுமையும் எம்மீதுள்ளது.
துரிதமாக மாற்றமடைந்து வரும் உலகப் போக்கில் காணப்படும் சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலான கல்விமான்களை உருவாக்குகின்ற கலாபீடமாக இது திகழ வேண்டும் என்பதே எமது எல்லோரினதும் அவாவாகும்.
1954ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் ஓலைக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரபு மத்ரிஸா, இன்று கம்பீரமான அழகிய பௌதீக தோற்றத்துடன் பல சாதனையாளர்களை உருவாக்கிய சாதனைகளையும் பதிவு செய்த பெருமையுடன் வைர விழா காணும் கலாபீடமாக இன்று திகழ்கிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .