Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அதிபர்கள் பாடசாலைகளில் அரசியல் செய்யக்கூடாது. பாடசாலை என்பது ஒரு பொதுவான இடமாகும். எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலைகளில் அரசியலை வளர்ப்பதால் எமது மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை பாதிப்படையச் செய்துவிடும். இவ்வாறான விடயங்களுக்கு எந்த அதிபர்களும் இடமளிக்கக்கூடாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலை சங்கத் தலைவரும் அதிபருமான ஏ.எம்.அன்சார் தலைமையில் அதிபர்களுடனான சந்திப்பு இன்று(14) காலை 7.00 மணியளவில் சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் தங்களின் கடமைகளை செய்யவேண்டும். பாடசாலைகளில் அரசியல் பாகுபாடு காட்டி அரசியல் கட்சிகளுக்கு தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால் எமது பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்படையும். இதற்கு அதிபர்கள் மட்டுமின்றி பாடசாலைகளில் அரசியல் வளர்க்கின்ற அனைவரும் பதில்கூறவேண்டியவர்களாக இருக்கும்.
பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசியல்வாதிகளின் உதவிகள் தேவை. அவர்கள் உதவி செய்தார்கள் என்பதற்காக அவர்கள் சார்ந்த கட்சிக்கோ அல்லது குறித்த அரசியல்வாதியின் வளர்ச்சிக்காகவோ பாடசாலைகளையும் மாணவர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றார்.
7 minute ago
14 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
26 minute ago
37 minute ago