Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 31 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் பிரதேசத்துக்கான தனிக் கல்வி வலயக் கோரிக்கைக்கு இனச்சாயம் பூச வேண்டாம் என்பதுடன், 50 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்துடன் பொத்துவில் பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தின் கல்வித்துறையை பாதிக்கச் செய்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கல்வி அபிவிருத்தி தொடர்பில் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடல், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 'நீண்டகாலமாகவிருந்து பொத்துவில் பிரதேசம் கல்வித்துறையில் பின்னடைவைக் கண்டு வருகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்காக அப்பிரதேசத்துக்கான தனிக் கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், இதனைத் தடுப்பதற்கு இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டாம்' என்றார்.
'இப்பிரதேசத்தின் கல்வி நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பல தடவைகள் உரையாற்றியுள்ளதுடன், இப்பிரதேசத்துக்கான தனிக் கல்வி வலயத்தை வலியுறுத்தி தனிநபர் பிரேரணையையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, பொத்துவில் பிரதேசத்துக்கு தனிக் கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபையும் மாகாணக் கல்வி அமைச்சும் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
'சிறுபான்மை இனங்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராட்டங்களை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு, எங்கனம் முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் கல்விக்கு பல்வேறு தடைகள் வருகின்றன. இவ்வாறு ஏற்படுத்தப்படும் அநியாயங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் பொறுப்புக் கூற வேண்டும்.
மேலும், இப்பிரதேசத்தில் 60 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வெற்றிடங்களும்; இதுவரையில் நிரப்பப்படாமல் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல இன மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் எமது கிழக்கு மாகாண சபை செயற்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .