Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களின் பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன்ட்; எஸ்.ஆதம்பாவா தெரிவித்தார்.
குடும்ப வன்முறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் ஊர்வலம் நடைபெற்றதுடன், விழிப்புணர்வு நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை, பாலமுனை திராய்க்கேணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றபோதே இதில் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'போதைப்பொருள் பாவனையால் இன்று குடும்பங்களில் வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுகின்றன.
மேலும், குடும்ப உறவினர்களாலேயே சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பமு; சம்பவங்களும் காணப்படுகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதோடு, அங்கு தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .