2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டுதான் அரசாங்கம் செயற்படுகின்றது'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டுதான் இந்த நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பங்காளியாக இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பெரும் பங்கு வகிக்கின்றது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஷரீப் கலாசார நிலையத்துக்கான மலசல கூடம் இன்று(03) காலை 7.30 மணியளவில்  திறந்து வைத்தப் பின்னர் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இறுதி நேரத்தில் எடுத்த சரியான முடிவினால்தான் இன்று இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரக்காரணமாக அமைந்துள்ளது என்பதை இந்த அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என நான் நினைக்கின்றேன்.

மு.காவின் தலைமை வழங்கிய வாக்குறுதிகளை ஒருபோதும் மீறாது என்பதை கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் அறிவார்கள். இதேபோல் இந்த நல்லாட்சியாளர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் அறிந்துள்ளார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X