Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை புதிய நகர அபிவிருத்தி;த் திட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்குமான அபிவிருத்தித் திட்டமென திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்த புதிய நகர அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமாக இலங்கை காணி மீட்பு அதிகாரசபை சாத்தியவள அறிக்கையை தயாரித்துள்ளது. இருப்பினும், இது முழுமைப்படுத்தப்பட்ட இறுதியான திட்ட வரைபு அல்ல' என்றார்.
'இதற்கிடையில், இந்த அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் எவ்வித கருத்துகளோ அல்லது ஆலோசனைகளோ பெறப்பாடாமல் திட்டவரைவு மேற்கொள்ளப்பட்டுள்ளளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்;கள், புத்திஜீவிகள் ஆகியோரின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட்ட பின்னரே இதற்கான இறுதித் திட்டவரைபு முழுமைப்படுத்தப்படவுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புகளை ஏற்படுத்தி தெளிப்படுத்தவுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
'இந்தத் திட்டத்தின் மூலம் தமிழர்களின் பெரும்பாலான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம்களை குடியேற்ற திட்டமிடப்படுவதாகவும் இத்திட்டம் பற்றிய தவறான கருத்துகளை தமிழ் மக்கள் மத்தியில் சிலர் பரப்புகின்றனர். ஆனால், இதில் எவ்வித உண்மையும் இல்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து உருவாக்கிய நாட்டின் நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ அநீதி ஏற்பட மக்கள் பிரதிநிதிகளான நாம் இடமளியோம்.
கல்முனை புதிய நகர அபிவிருத்தியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படையாhக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும். இதையே நான் விரும்புகிறேன். மேலும், கல்முனை மண்ணில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் இதனை சீர்குலைக்க இடமளிக்க முடியாது' எனவும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான வீ.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, எல்.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
24 minute ago
30 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
47 minute ago
1 hours ago