2025 மே 22, வியாழக்கிழமை

போதையில் குழப்பம் விளைவித்த 6 மாணவர்களுக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில், அறுகம்பைக் கடலில் மதுபோதையில் நீராடிக்கொண்டிருந்தபோது குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்வதற்கு  பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ரீ.எம்.றாஸிக், இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
அறுகம்பைக் கடலில் சனிக்கிழமை (20) மாலை இம்மாணவர்கள் மதுபோதையுடன்; நீராடி குழப்பம் விளைவித்த வேளையில், அவ்விடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குழப்பம் விளைவிக்க வேண்டாமெனக் கூறி தடுத்தனர்.

இதையும் மீறி பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் கடமையைச் செய்ய விடாது அம்மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன்போது, பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவரும் 03 மாணவர்களும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள அதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X