2025 மே 21, புதன்கிழமை

புதையல் தோண்ட சென்ற எழுவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பாணாமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதகம காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்ட  சென்ற 07 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை 05.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்தே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, புதையல் தோண்டுவதற்காக கொண்டுவரப்பட்ட உபகரணங்கள் மற்றும் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .