2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பிரத்தியேக தொழில் வங்கி ஒன்றை உருவாக்கவுள்ளோம்'

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

வெளிநாட்டு முதலீடுகளை கிழக்கை நோக்கி ஈர்த்து சுமார் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி வழங்குவதனூடாக கிழக்கு மாகாணத்தில் வறுமையை ஒழிக்க முடியும் . இதன் அடிப்படையில் மிக விரைவில் பிரத்தியேக தொழில் வங்கி ஒன்றை உருவாக்கவுள்ளோம்; என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வசதி குறைந்த மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05) மாலை அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயத்தில் ஆசிரியர் மௌலவி என்.கே.சியாத் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையல்,

பௌதீக வள அபிவிருத்தியையும் தனிமனித அபிவிருத்தியையும் சமாந்திரமாகக் கொண்டு செல்வதனூடாகவே உண்மையான சமூக அபிவிருத்தியைக் கொண்டு செல்ல முடியும்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொழும்பில் இடம்பெறவுள்ள 'கிழக்கில் முதலிடுங்கள் - 02' என்ற தலைப்பிலான வெளிநாட்டு முதலீட்டாளர் மாநாடுமிக முக்கியமானதாகும்.

கிழக்கில் பல்வேறு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலிடத் தூண்டி, நமது வளங்களிலிருந்து உச்ச கட்ட பயன்களை அடையத் தீர்மானித்துள்ளோம். அதனூடாக பாரிய அபிவிருத்தியையும் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும்.

அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை கிழக்கை நோக்கி ஈர்ப்பதனூடாக சுமார் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை வழங்கி,வறுமையை முற்றாக துடைத்தெறியும் திட்டத்தைக் கொண்டுள்ளோம் என்றார்.

மேலும், பிரத்தியேக தொழில் வங்கி ஒன்றை ஸ்தாபிக்க்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன். அவ்வங்கியூடாக வேலையற்ற இளைஞர,; யுவதிகள் பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டு, முன்னுரிமையடிப்படையில் தொழில் வழங்கும் பொறிமுறையை உண்டாக்கவிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X