2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'பெற்றோர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

நாட்டில் சிறந்த ஆளுமையுள்ள சமூதாயத்தை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அஸ்- ஸஹ்றா வித்தியாலயத்துக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் நிதி ஒதுக்கீட்டில் 01 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிரதி பண்ணும் இயந்திரம் கையளிக்கும் வைபவம் இன்று  வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ. கலீலுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில்,

ஒரு கிராமத்தின் வளர்ச்சி அக்கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையிலேயே தங்கியுள்ளது. தற்போது எமது பிரதேசங்களில் கல்வி நிலை உயர்ந்து செல்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு அதிபர், ஆசிரியர்களால் மட்டும் போதாது பெற்றோர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

அதேபோல், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை கமூகம் என்பன பாடசாலையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ வேண்டும்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி கல்விலேயே தங்கியுள்ளது. இப்பாடசாலையில் நிலவும் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம், கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சி. கஸ்ஸாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .