Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், ஏ.எஸ்.எம்.முஜாஹித்
2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் 'புலமைப்பூக்கள் - 2015' விழா, சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
மெஸ்ரோ நிறுவனமும் கல்முனை வலயக் கல்விப் பணிமனையும் இணைந்து நடத்தும் இவ்விழாவின்போது கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, மாளிகைக்காடு உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளில் சித்தியடைந்த 214 மாணவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் 05 இடங்களைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட்டின் அனுசரணையுடன் மெஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நசீல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன்;, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரீ.கலையரசன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாகவும் அரசியல் பிரதிநிதிகள், மெஸ்ரோ நிறுவனத்தின் உயர்பீட மற்றும் பிரதேச உறுப்பினர்கள், உயரதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago