2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'போஷாக்கின்மையால் 1000 குழந்தைகளுக்கு 15 குழந்தைகள் படி இறக்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 29 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

போஷாக்கு இன்மையால் இலங்கையில் ஒரு வயதுக்கு உட்பட்ட  1000 குழந்தைகளுக்கு 15 குழந்தைகள் இறக்கின்றனர். ஐந்து பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளை நிறை குறைவாகவும்ஷ உரிய உயரத்தைக் கடக்காமலும் காணப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுடீன் தெரிவித்தார்.

தேசிய போஷாக்கு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இன்று புதன்கிழமை கர்ப்பினி தாய்மார்களுக்கு நடத்தப்பட்ட போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'போஷனையுள்ள, சுகாதாரமான உணவுகளை எமது உணவுப் பழக்கத்தில் கொள்வோமாயின் சிறந்த உடல், உள ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

மேலும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்தான நோய்களுக்கே அரசாங்கம் அதிகளவில் செலவிடுவதுடன்,  நோயுற்றவரினதும் பொருளாதாரம் மற்றும் உடல் நலத்தை பாதிக்கச் செய்கின்றது' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X