2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'பத்து ஆண்டுகளில் கட்டிய வீடுகளை சஜித் பத்து மாதங்களில் கட்டினார்'

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சி காலத்தின்போது, பத்து ஆண்டுகளில் கட்டிய வீடுகளை ஒப்பிடுகையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பத்து மாதங்களில் அதனைப்போன்று  5 மடங்கு வீடுகளை அதிகமாக கட்டினார் என ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் டி.கே.தயா கமகே தெரிவித்தார்.

மேலும்,அம்பாறை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் 200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனினும், அமைச்சர் சஜித் பிரேமதாச  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டப் பின்னர்; 1,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்ட தெஹியத்தகண்டி பிரதேச ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் செயலகத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் சீமெந்து வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (30) நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த ஐந்து ஆண்டுகளின் இறுதிக்குள் மாவட்டத்தில் ஏறத்தாழ 27,000 நிரந்தர  வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக புதிய அரசாங்கம் வீடு கட்டமைப்பு மற்றும் புதுப்பித்தல் உதவிகளுக்காக கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை,வீடுகள் அமைப்பதற்கான சீமெந்து உதவி வழங்கும் திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

மேலும்,அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் நூறு பேருக்கு குறைந்தது 50 கிலோ கிராம் கொண்ட பத்து சீமெந்து பக்கெட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .