Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 30 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பல்கலைக்கழகங்கள் வெறுமனே கல்வி கற்பிக்கக்கூடிய இடமாக மட்டும் இருந்துவிடாது, ஆய்வு நிலையமாகவும் நாட்டின் தேசிய அபிவிருத்தியை இலக்காக கொண்டும் செயற்பட வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.
'தேசிய அபிவிருத்தியில் இஸ்லாம் மற்றும் அரபுக் கற்கைகளின் வகிபகம்' எனும் தொனிப்பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப்பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வு மாநாடு, அப்பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பல்கலைக்கழகங்கள் நாட்டின் வளத்தை முன்கொண்டு செல்வது மட்டுமல்லாமல், மாணவர்களின் ஆளுமை விருத்தியையும் முன்னெடுத்து அவர்களை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்கின்றன' என்றார்.
'மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியுடன் தொழில்நுட்பக் கல்வி, கணினி, ஆங்கில அறிவு போன்றவற்றை விருத்தி செய்து சர்வதேச தொழிற்சந்தையில் போட்டிபோடக் கூடியதாக எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago