2025 மே 21, புதன்கிழமை

'மு.கா இனியும் பிரமுகர் அரசியலைத் தொடரக் கூடாது'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எஸ்.எம்.அறூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனியும் பிரமுகர் அரசியலைத் தொடரக் கூடாதென்பதுடன், மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவர்களாக பிரமுகர்கள் மாற்றப்படுகின்ற அரசியலையே செய்ய வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

மு.கா.வின் பொத்துவில் தொகுதிக்கான கூட்டம் ஒலுவில் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  'எமது கட்சி இன்னுமின்னும் தனது பணிகளை கிராமங்களில்; அடிமட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், இந்தக் கட்சி மக்களுக்கானதே தவிர பிரமுகர்களுக்கானது அல்லவென்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் அடிமட்டப் போராளிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அவர்கள்;  சவால்களைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை சுமந்துகொண்டு பல தடைகளையும் தாண்டிச் செல்வதற்கு துணைபுரிகின்றவர்கள்' என்றார்.

'பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சியையும் தலைமையும் பிழையாக வழிநடத்துவதையும் போராளிகளுக்கும் தலைவருக்கும் இடையிலான தொடர்பை தூரமாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் எல்லாவற்றையும் வைத்திருப்பதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X