Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஓர் அரசியல் கட்சியல்ல.மாறாக இது முஸ்லிம் சமூகத்தின் கட்சியாகும் என்பதை இன்றைய இளைஞர்கள் மத்தியில் நாம் தெளிவு படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் சனிக்கிழமை (17) இரவு அட்டாளைச்சேனை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த தினத்தை முதன் முறையாக அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அன்றைய தினம் இடம்பெறவுள்ள இளைஞர் மாநாடானது,அம்பாறை மாவட்டத்திலுள்ள 204 முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 1000 இளைஞர்களை உள்ளடங்கிய மாபெரும் இளைஞர் மாநாடாக அமையவுள்ளது.
அம்மாநாட்டை வெற்றியுடன் கொண்டு செல்வதற்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள 18 கிளைக் குழுக்களிலும் இருந்து ஒரு பிரிவில் சுமார் 8 பேரை தெரிவுசெய்ய வேண்டும். விசேடமாக அட்டாளைச்சேனைக்கு மாத்திரம் ஒரு பிரிவில் 8 பேரை தெரிவு செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும்,இம்மாநாட்டில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த விருது வழங்கப்படவிருப்பதுடன் கட்சி எதிர்கொள்ளும் சவால், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவாலுக்கு கட்சி செலுத்தி வரும் வாகிபாகங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
01 Oct 2025
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Oct 2025
01 Oct 2025
01 Oct 2025