Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
எதிர்காலத்தில் மாணவர்களை தேடல் மிக்கவர்களாக மாற்றுவதற்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதுடன், இதற்கு ஒத்தாசையாக பாடசாலை சமூகத்தவர்களும் பெற்றோர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
பாலமுனை சமூக மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பண்பாட்டு பரவச முப்பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் சமூக மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்;தருமான எம்.எஸ்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில், 'இன்று அதிகமான மாணவர் சமூகம் கையடக்க தொலைபேசியில் மூழ்கி தங்களது கல்வி ரீதியான தேடல்களில் இருந்து வேறு மாற்றுத்திசைக்கு தங்களை மாற்றி செயற்பாடுகின்ற பரிதாப நிலையை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன், ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களை விட கல்வி மற்றும் தொழில் துறை ரீதியாக பின்னோக்கி செல்கின்ற ஒரு நிலையை நாம் காணக்கூடியதான இருக்கின்றது. இவ்விடயத்தினை கல்வியற் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் நிதர்சனமாக காணக்கூடியதாக உள்ளது.
மாணவர்களை கல்வி ரீதியாக முன்னேற்றம் செய்வதற்கு அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களும் முழுமையாக செயற்பட வேண்டிய காலத்தில் நாம் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று அதிகமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைச் செல்வங்களுக்கு விரும்பிய படி கல்வியை வழங்குவதுடன் அவர்களது விருப்பத்திற்கமைவாக கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்குவதால் பல பிழையான திசைகளுக்கு பிள்ளைகள் ஆளாக்கப்படுதுடன், இவ்வாறான பிள்ளைகள் கல்வி ரீதியாக பின்னடைவை சந்திக்கின்ற துர்ப்பாக்கிய நிலையை நாம் இன்று காண்கின்றோம். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் தமது மாணவச் செல்வங்களை தேடல்மிக்கவர்களாக மாற்றுவது காலத்தின் தேவையாகும் என மாகாண சபை உறுப்பினர் தவம் மேலும் தெரிவித்தார்.
7 minute ago
14 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
26 minute ago
37 minute ago