Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
மாணவர்களின் மத்தியில் காணப்படும் கண் பார்வைக் குறைபாட்டை அடையாளம் கண்டு உரிய காலத்தில் அதற்கான பரிகாரத்தை பெற வேண்டுமென கண் சிகிச்சை வைத்திய அதிகாரி, வைத்தியர் அல் அமீன் றிஸாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
'2020 ஆண்டில் சகலருக்கும் பார்வை' எனும் தொனிப்பொருளில் கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை (09) கல்முனை அஷ்ரப்; ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
தற்காலத்தில் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் அதீத பாவனை, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவை காரணமாக பாடசாலை மாணவர்களின் கண் பார்வையில் மாற்றம் ஏற்படுகின்றது. இது ஆரம்பத்தில் சிறிதாக இருந்து பின்னர் படிப்படியாக அதிகரித்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களின் கேட்டல் மற்றும் பார்வை போன்ற விடயங்களில் ஆசிரியர்கள் அவதானம் செலுத்த வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டு வைத்தியப் பரிசோதனைக்கும் மாணவர்களை உட்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago