2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கம் கொண்டுவரப்பட வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கம் ஆரம்பம் முதலே கொண்டுவரப்படுமாயின் பிற்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கின்றவை சொற்ப வருமானமாயினும் அவற்றில் ஒரு பகுதியை சேமிப்புக்காக வைத்துக்கொள்ளும் பழக்கம் தானாகவே ஏற்படும் என முகாமையாளர் எஸ்.எச்.எம். மக்பூல் தெரிவித்தார்.

தேசிய சிறுவர் சேமிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஹற்றன் நெஷனல் வங்கிக் கிளை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கான சித்திரம் வரைதல் மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை(31) பிற்பகல் வங்கிக் கிளையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகளை விருத்தி செய்யும் வகையிலும் மாணவர்களுக்கு அதில் ஆர்வம் காட்டும் வகையிலும் வருடாவருடம் எமது கிளை இவ்வாறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி தேசிய ரீதில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரப்பட்டு அவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்படுகின்றன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X