Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்வாங்கி தனது சேவையால் சிறப்பாக அபிவிருத்தி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சரின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதிதுவப்படுத்திக் கொண்டு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து ஆளும் தரப்புக்கு மாறிய மஞ்சுல பெர்ணான்டோ தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, இன்று வியாழக்கிழமை காலை சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் நடந்து கொண்டிருக்கும்போது இவர் ஆளும் தரப்பின் பக்கம் தாவினார்.
மஞ்சுல பெர்ணாண்டோ அங்கு மேலும் கருத்துக் கூறுகையில்,
முதலமைச்சரின் சேவையில் இணைந்து நானும் பங்கு கொண்டு எனது மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய விரும்புகிறேன்.
எனவே, இன்றிலிருந்து நானும் முதலமைச்சரின் எதிர்கால திட்டங்களுக்கு ஆதரவு வழங்கி அவருடன் இணைந்து கொள்கிறேன் என்றார்.
சபை அமர்வில் பல உறுப்பினர்களும் தனிநபர் பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றினர்.
எதிர்கட்சியில் ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago