Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல இஸ்மாயில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் இன்று நடத்தப்படுகின்ற பேராளர் மாநாட்டை அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் எதிர்த்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் இன்று (17) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்பி கடந்த பொதுத் தேர்தலின்போது 33 ஆயிரம் வாக்குகளை வழங்கி அக்கட்சியையும் தலைமையும் கௌரவப்படுத்தி வாக்களித்தனர். இந்த மக்களையும் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏமாற்றியுள்ளார்.
தேர்தல் காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. தருவோம் என்ற விடயத்தை முன்னிருத்தி இக்கட்சிக்கு வாக்குகளை சேகரித்தார். கட்சியின் உருவாக்கத்துக்கு முதல் காரண கர்த்தாவாக இருந்த அரசியல் அனுபவம் பெற்ற இக்கட்சியின் செயலாளர் நாயகத்தை கட்சியை விட்டு இடை நிறுத்தியுள்ளோம் என்று சட்ட விரோதமான முறையில் முடிவெடுத்த பல காரணங்களினால் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல் இன்று குருநாகலில் நடாத்தப்படுகின்ற பேராளர் மாநாட்டுக்கு கூட அம்பாறை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இருக்கும் கட்சியின் போராளிகள், உயர்பீட உறுப்பினர்கள் பலரை புறக்கணித்துவிட்டு நடத்தப்படுகின்ற ஒரு சிறு பிள்ளைத்தனமான செயலை செய்துவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயற்பாட்டினையும் சட்டபடியற்ற இந்த பேராளர் மாநாட்டையும் எதிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன்.
இந்த மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பிரதேசத்தில் வீதியெங்கும் கறுப்புக் கொடிகள் கட்டி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
29 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago