Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்வியே அடித்தளமாக இருக்கின்றது. ஆதலால் இருக்கின்ற வளங்களைப் பெற்று உச்சப்பயனை அடைவதற்கான வழிகளை நாம் செய்யும்போது கல்வியில் முன்னேறிய சமூகமாக எம்மை மாற்றிக் கொள்ளமுடியும் என நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்.
நாவிதன்வெளிப் பிராந்திய சிறுவர் கழகங்களுக்கிடையிலான ஒன்றுகூடல் நிகழ்வும் கலை நிகழ்வும் நாவிதன்வெளிப் பிராந்திய வேள்ட்விசன் மற்றும் நாவிதன்வெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் ஏற்பாட்டில் வேள்ட்விசன் நிறுவனத்தின் நாவிதன்வெளிப் பிராந்திய திட்ட இணைப்பாளர் எஸ்.சதீஸ் தலைமையில் சவளக்கடை கணேஷா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வேள்ட்விசன் நிறுவனம் பாரிய பங்காற்றிவருகின்றது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது சமூகம் கல்வியிலே முன்னேற்றமடையவேண்டும்
அதிலும் குறிப்பாக நாவிதன்வெளிப்பகுதியிலே வேள்ட்விசன் கல்விக்காக பாரிய பங்காற்றிவருவது எமக்கு கிடைத்த பெரும்கொடையாகும். வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதியினை சரியானமுறையில் ஏழை மக்களுக்காக செலவுசெய்து வருவதையிட்டு பெருமையடைவதுடன் இப் பகுதி பாடசாலைகள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் நன்றிதெரிவித்துக்கொள்கின்றேன்
அதேவேளை பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்கள் கையிலே தங்கியுள்ளது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியே முக்கியமானது. அவ்வாறான கல்வியினை சரியான முறையில் பெற்று சிறந்த தலைவர்களாகவும் ஆளுமையுள்ள மனிதராகவும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளுபவராகவும் தங்கள் பிள்ளைகளை மிளிரச்செய்யும் பொறுப்பு பெற்றோர் கையில் உள்ளது. இதனை விடுத்து வறுமையினைக் காட்டிக்கொண்டு அதனால் பிள்ளைகளை கல்வி கற்பதில் இருந்து இடைவிலகுவதை அனுமதிக்கக்கூடாது. உங்களுக்காகக வேள்ட்விசன் நிறுவனம் பல உதவிகளைச் செய்வதற்கு தயாராக உள்ளனர்'; என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago