Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கில்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. இதற்கு அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் காலத்துக்கு சுற்று நிருபங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்காமையினால் உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாத காரணத்தால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கில்களை பெற்றுக் கொள்ள முடியாது போனதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில் சங்க தலைவர் கே.எம்.கபீர் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை(10) இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கிடைலான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எமது பிரச்சினைகளை முன்வைக்க கூடியதாக இருக்கின்றது. இவர் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சரை சந்தித்து எமக்கு மோட்டார் சைக்கில்களை வழங்கவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அந்தவகையில் இலங்கை பூராகவும் 12 ஆயிரம் மோட்டார் சைக்கில்கள் வழங்க வேண்டி உள்ளது. அதில் அம்பாறை மாவட்டத்தில் 5,000 மோட்டார் சைக்கில்கள் வழங்கவுள்ளதாகவும் இதில் 2,400 அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
32 minute ago
58 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
5 hours ago